பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்; அறிவிப்பை வெளியிட்ட கமல்

Last Modified திங்கள், 25 ஜூன் 2018 (16:33 IST)
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வாரம் இரண்டு நாள் மட்டும் அவர் நிகழ்ச்சிக்கு வருகிறார். இந்நிலியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடலை அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் விஸ்வரூபம். இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. பல சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகி வெற்றி பெற்றது. அதில்  பூஜா குமார், ஆண்ட்ரியா, ராலும்ல் போஸ் ஆகியோr நடித்திருந்தனர். விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டபோதே, இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இருந்தபோதிலும் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்து வந்தது.
 
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை ஸ்ருதிஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி,ஆரும்,  இந்தி பாகத்தின் ட்ரெய்லரை அமீர்கானும் வெளியிட்டனர். இந்த ட்ரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிக்பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில்  விஸ்வரூபம் 2 படத்தின் பாடல் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :