திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (18:38 IST)

அட்லீயின் அடுத்த படம் என்னனு தெரியுமா?

அட்லீயின் அடுத்த படம் பற்றிய தகவலை அவரே தெரிவித்துள்ளார்



 
 
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
 
அடுத்த படமே விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கியவருக்கு, அதற்கடுத்ததாகவும் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்க, ‘மெர்சல்’ படத்தை இயக்கினார்.
 
அடுத்தும் விஜய்யை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்ததாக தெலுங்குப் படத்தை இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் அட்லீ. தெலுங்கின் மிகப்பெரிய ஸ்டார் இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.