திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:17 IST)

‘காளி’யை நம்பியிருக்கும் சுனைனா

விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்துள்ள ‘காளி’ படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார் சுனைனா. 
நகுல் ஜோடியாக ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’ என ஒருசில படங்களே பெயர் சொல்லும்படி அமைந்தன. விஜய்யின் ‘தெறி’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
தற்போது விஜய் ஆண்டனி ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்துள்ள சுனைனா, அந்தப் படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார். இதன்மூலம் தமிழில் மறுபடியும் ஒரு ரவுண்டு வரலாம் எனக் காத்திருக்கிறார் சுனைனா.
 
இந்நிலையில், வெப் சீரியலிலும் நடிக்கிறார் சுனைனா.