செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:17 IST)

பாலிவுட்டுக்குப் போகும் விஜய் சேதுபதி?

தெலுங்கைத் தொடர்ந்து ஹிந்திப் படத்திலும் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி என்கிறார்கள்.
ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் மூலம் தெலுங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்போது அவர் ஹிந்தியிலும் நடிக்கலாம் என்கிறார்கள்.
 
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. மாதவன் – விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். மாதவன் ஏற்கெனவே ஹிந்தியில் பிரபல நடிகர். விஜய் சேதுபதி கேரக்டருக்கு நடிகரைத் தேடும்போதுதான், அவரையே ஏன் இங்கும் நடிக்க வைக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
 
புதிதாக ஒரு நடிகரைத் தேடிப்பிடித்து அந்த கேரக்டருக்குள் புகுத்துவதைவிட, கேரக்டராகவே வாழ்ந்த விஜய் சேதுபதியையே அதில் நடிக்க வைத்துவிடலாம் என்று நினைக்கிறதாம் படக்குழு. அவரும் அடுத்த லெவலுக்குப் போனதுபோல் இருக்கும் என்கிறார்களாம். ஆனால், பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார் விஜய் சேதுபதி என்கிறார்கள்.