1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 13 ஜூன் 2018 (19:44 IST)

‘களவாணி’ இரண்டாம் பாகத்துக்காக உருவான பழமையான வீடு

களவாணி’ இரண்டாம் பாகத்துக்காகப் பழமையான வீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘களவாணி’. விமல் ஹீரோவாக அறிமுகமான இந்தப் படத்தில்தான், நாம் இப்போது ஆர்மி வைத்துக் கொண்டாடும் ஓவியா ஹீரோயினாகத் தமிழில் அறிமுகமானார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தில், கஞ்சா கருப்பு, சூரி, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, திருமுருகன் ஆகியோர் முக்கிய
வேடங்களில் நடித்தனர்.
 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. விமல் - ஓவியா மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் இந்தப் படத்தில், பெரும்பாலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இணைந்திருக்கிறார்கள். சூரிக்குப் பதிலாக, விமலின் நண்பனாக ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடிக்கிறார். வருகிற 22ஆம் தேதியுடன் இந்தப்படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைகிறது.
 
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஒட்டாரம் பண்ணாத’ பாடலை, மணி அமுதவன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்காக, பழமையான வீடு ஒன்றை செட் போட்டுள்ளனர். அதில், விமல் - ஓவியா ஆடிப்பாடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.