வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 13 ஜூன் 2018 (18:58 IST)

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது.

 
நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன் நடித்த இந்தப் படம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதனைத் தொடர்ந்து ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘விஸ்வாசம்’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், அவருடைய 63வது படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது. ‘லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்கள் மூலம் பரவலான அளவில் புகழ்பெற்ற சர்ஜுன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
 
கோபி நயினார் இயக்கத்தில் நயன் நடித்த ‘அறம்’ படத்தை இயக்கிய கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் படத்துக்குத் தலைப்பு வைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.