திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (22:16 IST)

அஜித்தின் ஜோடியான ரஜினி ஹீரோயின்

காலா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ஈஸ்வரி அடுத்து அஜித் ஜோடியாக நடிக்க உள்ளாராம். சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம்  விஸ்வாசம். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. விஸ்வாசம் படத்தில் ஏற்கனவே நயன்தாராவை ஹீரோயினாக ஒப்பந்தம்  செய்யப்பட்டு, படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
இந்நிலையில் காலா புகழ் ஈஸ்வரி ராவ்வை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். மகன் அஜித்துக்கு நயன்தாரா ஜோடியாம். அப்பா அஜித்துக்கு ஜோடியாக நடிக்குமாறு  ஈஸ்வரி ராவிடம் கேட்டதற்கு, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக் கூறப்படுகிறது. 
 
ஈஸ்வரி ராவ். திருமணமாகி குழந்தைகள் பெற்று 40 வயதை தாண்டினாலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் இவரை பார்த்து பிற நடிகைகளுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
காலா படத்தில் மேக்கப் இல்லாமல் செல்வியாக நடித்த ஈஸ்வரி ராவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. விஸ்வாசம் படத்தில் அவருக்கு எந்த மாதிரியான  கதாபாத்திரம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துயுள்ளது. இப்படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.