திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (10:58 IST)

மீ டூ வில் அம்பலம் : மன்னிப்பு கேட்ட காமெடி நடிகர் டி.எம் கார்த்திக்

மீ டு விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் டி.எம். கார்த்திக் பெண்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 
நண்பன், தில்லுக்கு துட்டு உட்பட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் டி.எம்.கார்த்திக். மீ டு விவகாரத்தில், டிவிட்டர் பக்கத்தில் இவர் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கூறியிருந்தனர். அந்த புகார்களை பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் அம்பலப்படுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், டி.எம்.கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
 
சமீப காலமக மீ டு இயக்கத்தில் என்னை பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகிறது. நான் பெண்களை மதிக்கிறேன். தெரியாமல் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
 
அவரின் டிவிட்டை சின்மயியும் ரீடிவிட் செய்துள்ளார்.