1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
  4. Thanga tamil selvan scores hattrick as admk MLA

"ஹாட்ரிக்" அடித்த அதிமுக எம்எல்ஏ

"ஹாட்ரிக்" அடித்த அதிமுக எம்எல்ஏ

ஹாட்ரிக் வெற்றி
தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வன் "ஹாட்ரிக்" சாதனை படைத்துள்ளார்.
 

 
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழச் செல்வன், திமுக வேட்பாளர் மூக்கையாவை 196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
ஏற்கனவே, 2001 ஆண் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு தள்ளுபடியான நிலையில், மாற்றுவேட்பாளரான தங்கதமிழ்ச்செல்வனுக்கு அதிர்ஷடம் அடித்தது. திமுக வேட்பாளர் ஆசையனை காட்டிலும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில், திமுக வேட்பாளர் மூக்கையாவை விட 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
தமிழகத்தில் ஆண்டிப்பட்டி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.
 
 
 
 
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
டெல்லி சிறப்பு பிரதிநிதியாகிறார் மதுசூதனன்?