ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 19 மே 2016 (14:53 IST)

கருத்து சொல்லாத கருணாநிதி

கருத்து சொல்லாத கருணாநிதி

கருத்து சொல்லாத கருணாநிதி
நடைபெற்று முடிந்த சட்ட தேர்தல் குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
 

 
தமிழகத்தில் எந்த ஒரு முக்கிய அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள், சமூகம் சார்ந்த செயல்கள் நடைபெற்றால் அதற்கு உடனே தனது கருத்தை தைரியமாக வெளியிடுபவர் திமுக தலைவர் கருணாநிதி. மேலும், தனது கருத்தை வலுப்படுத்தும்விதமாக அதை அப்படியே தனது ஃபேஸ்புக்கில் வெளியிடுவார்.
 
ஆனால், சட்ட தேர்தல் மன்றத் தேர்தல் 2016 முடிவுகள் இன்று காலை முதலே வெளியாகி வருகிறது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வெளியாகி வருகிறது. ஆனால், திமுக வலுவான எதிர்க்கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில், தனது கருத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையாகவும் சரி. தனது ஃபேஸ்புக்கிலும்  சரி வெளியிடவில்லை. மிகவும் மவுனம் காத்து வருகிறார். மவுனத்திற்கான காரணம் தெரியவில்லை.