1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Fans Rejoice as Kamrudeen Receives Red Card and 90-Day Salary Cut

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பாரு, கம்ருதீனுக்கு 90 நாள் சம்பளம் கிடையாதா? துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
சின்னத்திரை மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக், பாரு, கம்ருதீன் மீது எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கைதான். விதிமுறைகளை மீறியது மற்றும் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் காரணமாக இருவருக்கும் 'ரெட் கார்டு' வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, அவர்களின் 90 நாட்களுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதுமே, பிக்பாஸ் ரசிகர்கள் துள்ளி குதித்து கொண்டாடி வருகின்றனர். "தர்மம் வென்றது", "தவறு செய்தவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை" என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். பாரு, கம்ருதீனின் இந்த வீழ்ச்சி, ஒரு ரியாலிட்டி ஷோவில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.  
 
அதே நேரத்தில் சாண்ட்ரா ஓவர் ஆக்டிங் என்றும், பாரு, கம்ரூதின் செய்தது தவறு என்றால் சாண்ட்ராவும் ஃபேக் என்றும் சில விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சேது சார்.. அந்த நா**ளை வெளியே தள்ளுங்க.. பாருவை கிழித்த சின்னத்திரை நடிகை