1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
  4. "SK's Baasha": Director R Kannan Hails Sivakarthikeyan's Parasakthi as a Masterpiece!

பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் ‘பாட்ஷா’.. இயக்குனர் ஆர்.கண்ணன் பேச்சு..!

பராசக்தி சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ஆர். கண்ணன், இன்று நடந்த புரமோஷன் விழாவில் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ரஜினிகாந்திற்கு 'பாட்ஷா' எப்படியோ, அதுபோன்ற ஒரு மைல்கல்லாக அமையும் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 
திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் மெய்சிலிர்க்க வைப்பதாகவும் படத்தின் கருப்பொருள் மிக அழுத்தமாக பதியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இப்படம் எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய அவர், 'இந்தி திணிப்பு' என்ற சமூகப் பிரச்சனையை எவ்வளவு நேர்த்தியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சுதா கொங்கரா கையாண்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
 
"சுதா தான் நிஜமான பராசக்தி" என்று பாராட்டிய அவர், சிவகார்த்திகேயனின் நடிப்பு ரசிகர்களுக்கு ஒரு புதிய விருந்தாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மொழிப்போர் மற்றும் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், 2026 பொங்கல் ரிலீஸில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பார்வதிக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. பிக்பாஸ் கொடுத்த ரெட் கார்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு..!