வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (19:18 IST)

கவர்ச்சி களத்தில் குதித்த பிந்து மாதவி

தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானவர்  நடிகை பிந்து மாதவி. வெப்பத்தின் வெற்றிக்கு பிறகு  ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானார்.  
 
தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த  பிந்துமாதவி இதுவரை எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்தது கிடையாது .‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவியை கோலிவுட் பக்கம் காணவில்லை. தமிழில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 1-ல் பங்கேற்றதன் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு தன்னை அடையப்படுத்திக் கொண்டார்.  பிறகு தான்  இழந்த  மார்கெட்டை தக்கவைத்த பிந்து தற்போது "புகழேந்தி என்னும் நான்’, ‘கழுகு 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
சமீபத்தில் நடிகை பிந்து மாதவி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது.