*பிக்பாஸில் ஒரு போட்டியாளரை மட்டும் புகழ்ந்து தள்ளிய மஹத்! *
நடிகர் மஹத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியில் போகும் முன் அனைத்து போட்டியாளர்கள் பற்றியும், பிக்பாஸ் வீட்டில் இருந்தது பற்றியும் கூறினார்.
கமலிடம் ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றி பேசிய மஹத், ரித்விகா பற்றி மட்டும் கொஞ்சம் உணர்ச்சி பூர்வமாக பேசினார்.
"எனக்கு பிக்பாஸ் வீட்டில் எதிர்பார்க்காமல் கிடைத்த உண்மையான நட்பு ரித்விகா. அவருக்கு இருக்கும் மனது இங்கு யாருக்கும் இல்லை என்று கூறுவேன். ரொம்ப நல்ல பொண்ணு. அது தான் உண்மையான தமிழ் பொண்ணு" என மஹத் கூறினார். அதற்கு அரங்கத்தில் இருந்த மக்களிடமிருந்தும் நல்ல கைதட்டல்கள் கிடைத்தது.
"மஹத் நல்லவன் தான். அவனுக்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது" என மஹத்துக்கு ஆதரவாக ரித்விகா கமலிடம் பேசினார்.