1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 10 மே 2024 (20:42 IST)

குக் வித் கோமாளியில் கிரிக்கெட் வீரர்கள்.! களம் இறக்கிய விஜய் டிவி..!!

Cook With Comali
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 5ஆவது சீசனில் இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக  முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லட்சுமிபதி பாலாஜி மற்றும் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் கலந்து கொண்ட புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமையல் தொடர்பான இந்த நிகழ்ச்சிக்கு கடந்த 4 சீசன்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக இருந்து வந்துள்ளனர்.  தற்போது வெங்கடேஷ் பட், சன் டிவி தொலைக்காட்சிக்கு செல்லவே, மற்றொரு நடுவராக  மாதம்பட்டி ரங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
 
கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி குக் வித் கோமாளி 5ஆவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மணிமேகலை மற்றும் ரக்‌ஷன் இருவரும் தொகுப்பாளர்களாக இடம் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் ஷாலின் ஷோயா, அக்‌ஷய் கமல், திவ்யா துரைச்சாமி, பூஜா வெங்கட், முகமது இர்ஃபான், வசந்த் வசி, பிரியங்கா தேஷ்பாண்டே, விடிவி கணேஷ், சுஜீதா, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டுள்ளனர். 
 
இந்த நிலையில்  இந்த வாரம் கிராமத்து விருந்து எபிசோடு நடைபெற இருக்கிறது. இதில் கிராமத்து சாயலில் பானையை கையில் வைத்து கொண்டு டிஸ் செய்யும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த எபிசோடில் தங்கதுரை சப்பானி கதாபாத்திரத்திலும், ராமர் நாட்டாமை கதாபாத்திரத்திலும் கலக்குகின்றனர்.
 
இந்த எபிசோட்டில் புதிய கோமாளியாக காமெடியன் டிஎஸ்கே, டிஆர் கதாபாத்திரத்தில் வந்துள்ளார். இந்த நிலையில்   முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுப்பிரமணியம் பத்ரிநாத் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.