ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (15:00 IST)

எல்லோரும் சன் டிவி பாருங்கள்.. நேற்று குக் வித் கோமாளி தொடங்கிய நிலையில் வெங்கடேஷ் பட் அறிவிப்பு..!

Chef Venkatesh Bhatt
விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 நேற்று தொடங்கிய நிலையில் எல்லோரும் இன்று முதல் சன் டிவி பாருங்கள் என்று வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும் நடுவர்களாக இருந்த நிலையில் இந்த சீசனில் வெங்கடேஷ் பட் அவர்களுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் நடுவராக பணியாற்றுகிறார்.

இந்த நிலையில் நேற்று கோலாகலமாக குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கிய நிலையில் இன்று வெங்கடேஷ் பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எல்லோரும் சன் டிவி பாருங்கள் என்றும் சன் டிவியில் காலை 8 மணிக்கு உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்

எல்லோரும் என்னை மிஸ் செய்கிறீர்கள் என்று மெசேஜ் அனுப்பியதை பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன் என்றும் என் மீது அன்பு வைத்திருந்த எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய அவர் உங்களை என்றும் நான் ஏமாற்ற மாட்டேன் என்றும் என்றைக்கும் உங்களை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் கூறி சன் டிவியில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது இன்று முதல் 8 மணிக்கு சன் டிவி பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva