மீனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Meenam
Last Modified வெள்ளி, 16 அக்டோபர் 2020 (16:06 IST)
கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்(வ)  - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர  ஸ்தானத்தில் புதன்(வ) -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில்  ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
உங்களுடன் பழகுபவர்களும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று  விரும்பும் மீன ராசி அன்பர்களே,   இந்த மாதம் சில சங்கடங்கள் நேரலாம்.  எதிர்பாராத  இடமாற்றம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம்  பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.
 
குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. கெட்ட  கனவுகள் உண்டாகலாம்.
 
பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
 
மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 
 
பூரட்டாதி 4ம் பாதம்:
 
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
 
உத்திரட்டாதி:
 
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய்  விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.
 
ரேவதி:
 
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும்.  போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.
 
பரிகாரம்: தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படியுங்கள். வெற்றி கிட்டும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 17, 18; நவம்பர் 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 7, 8.


இதில் மேலும் படிக்கவும் :