திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:58 IST)

கும்பம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) -  சுக ஸ்தானத்தில்  ராஹூ  களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம  ஸ்தானத்தில் புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
 
ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காணும் கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக  செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை .
 
குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மீது கரிசனத்துடன் நடந்து கொள்வீர்கள்.
 
பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி  உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.
 
அவிட்டம் 3, 4 பாதம்:
 
இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில  பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக்  கொள்ளுங்கள்.
 
சதயம்:
 
இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள்.  திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை  செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
    
பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
 
இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம்  இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.
 
பரிகாரம்: நவகிரகங்களை தினமும் வலம் வந்து வணங்கவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 11, 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 5, 6.