மகரம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

Magaram
Last Modified வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:48 IST)
கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) -  பஞ்சம  ஸ்தானத்தில்  ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்   - பாக்கிய  ஸ்தானத்தில் புதன்(வ) - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:
கோபப் படுபவர்களிடம் இருந்து சற்று தள்ளியே நிற்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம்  காரியம் துரிதமாக நடைபெறும். சில எதிர்பார்த்த காரியங்கள் நடந்து  முடியவில்லை என்ற எண்ணம் மனதை வருத்திக் கொண்டிருக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால் மிகவும் டென்ஷனாகி விடுவீர்கள். மனவலிமையை அதிகமாக்க  தியானம் செய்யுங்கள். தீராத தலைவல்லியாக இருந்த காரியங்கள் இப்பொழுது சாதகமாகும்.
 
கலைத்துறையினர் அனுபவம் வாய்ந்த கலைஞர்களை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை வந்து சேர தாமதமாகும். வெளிநாடு சென்று வர  வாய்ப்பு கிடைக்கும் பொழுது உங்களுடைய பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
 
அரசியல் துறையினர்கள் மெத்தனமான போக்கை கைவிட்டு உற்சாகத்துடன் செயல்பட அறிவுறுத்தப் படுகிறார்கள். நிரந்தரமான செயல்கள் வெற்றிக்கு  வழிவகுக்கும். மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது கவனம் தேவை.
 
பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை  அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
 
திருவோணம்:
 
இந்த மாதம் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி  பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
 
அவிட்டம் 1,2 பாதம்:
 
இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி  துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு  கிடைக்கும். 
 
பரிகாரம்: ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 2, 3, 4..


இதில் மேலும் படிக்கவும் :