வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:27 IST)

துலாம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

கிரகநிலை: ராசியில் சூர்யன், சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக  ஸ்தானத்தில் புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  

பலன்:
திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு கவலைப்படும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை  சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த  உதவியும் கிடைக்கும். 
 
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலகட்டம். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து வாய்ப்புகள் வரலாம். உடனிருப்பவர்களால் நல்ல  ஆதாயம் ஏற்படும்.
 
அரசியல் வாதிகள் தக்க சமயத்தில் காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். பிரச்சினைகளில் இருந்து சற்று தள்ளியே நில்லுங்கள். இப்போதைக்கு எதிலும்  தலையிட வேண்டாம்.
 
பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். உடல் நலத்தில் சிறிது அக்கறை  செலுத்தவும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும். 
 
சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய  தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.
 
சுவாதி:
இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு  பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து  ஜெயிக்கலாம்.
 
விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத்  தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.
 
பரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வரவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 2, 3, 4
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 26, 27.