மீனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Meenam
Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (15:30 IST)
கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் -  சுக ஸ்தானத்தில் ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
29-Oct-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
29-Oct-19 அன்று  இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-Dec-19 அன்று  மாலை 6.21 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
அதிகார தோரணையுடன் நடந்து கொள்ளும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில்  மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
 
குடும்பத்தில் திடீர் செலவு உண்டாகலாம். எடுக்கும் காரியங்களில் தடைதாமதம் ஏற்பட்டு பின்பு சரியாகும். நீங்கள் எடுத்த வேலைகளை  சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவர். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவினர்களால் உற்சாகம் உண்டாகும்.  பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
 
தொழிலில் வியாபாரங்கள்  கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற  வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம்  கவனிக்கப்பட வேண்டிய காலமிது. மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. தொழில் வெற்றியடையும் கவலை வேண்டாம்.
 
உத்தியோகஸ்தர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும்.
 
பெண்கள் திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும்.  தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தார் விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.  குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள்.
 
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் மாதமிது. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள்  நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். செல்வாக்கு உயர் பாடுபடுவீர்கள்.
 
அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். 
 
மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.  மாணவர்கள் கல்வி  கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
 
பூரட்டாதி 4ம் பாதம்:
 
இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை  வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள்  தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக  இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி  வியாபாரம் செய்வது நல்லது. 
 
உத்திரட்டாதி:
 
இந்த மாதம் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும்.  பணவரத்து வரும்.  வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும்.  மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல்  இருப்பது நல்லது.
 
ரேவதி:
 
இந்த மாதம் மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர்  அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள்  விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான  முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.
 
பரிகாரம்:
 
முருகன் வழிபாடு, அம்மன் வழிபாடு செய்து மாலை சாற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 22, 23.


இதில் மேலும் படிக்கவும் :