1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (15:08 IST)

தனுசு: ஐப்பசி மாத ராசி பலன்கள்

கிரகநிலை: ராசியில்  சனி , கேது -  ரண, ருண   ஸ்தானத்தில் சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில் ராஹு -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
 
29-Oct-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் ராசிக்கு மாறுகிறார். 
29-Oct-19 அன்று  இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-Dec-19 அன்று  மாலை 6.21 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
தேவைப்படும் வார்த்தைகளை  மட்டும் அனைவரிடமும் பேசும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் பிடிவாத குணத்தை மட்டும்  தளர்த்திக் கொண்டால் காரிய வெற்றி உங்களைத் தேடி வரும். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். 
 
குடும்பத்தை சாராத ஒருவரால்  சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். 

சுபகாரியங்கள்  வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம் தொழிலில் உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு  நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும்.  சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள்.
 
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும்.  பணவரவு திருப்திகரமாக  இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை  விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். 
 
பெண்கள்  தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சின்னச் சின்ன செலவுகள் நேரிடலாம். கணவன்  மனைவி இடையே ஒற்றுமை தேவை.  சொத்து விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். 
 
கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு.  நீங்கள்  அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும்  வாகனங்கள் வாங்கலாம்.
 
அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும்.  எதிரிகள் விலகிச்செல்வார்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறல் வேண்டாம். கேளிக்கை போன்றவற்றில் கவனத்தைச் சிதறவிட வேண்டாம். பெரியோர் பேச்சை கேட்டு  நடப்பது நல்லது.
 
மூலம்:
 
இந்த மாதம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்  சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நன்மை தரும்.  பிள்ளைகளிடம் அன்புடன்  பேசுவது நன்மை தரும்.
 
கிரகநிலை: ராசியில்  சனி , கேது -  ரண, ருண   ஸ்தானத்தில் சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில் ராஹு -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. 
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து  செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து   வெற்றி பெறுவார்கள். பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு  இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். அதனால்  நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்   உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அலைய வேண்டி  இருக்கும். 
 
பரிகாரம்:
 
தினமும் முன்னோர்கள் வழிபாடும், சிவாலயத்திற்குச் சென்று வருவதும் நன்று.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 11, 12