திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (18:45 IST)

கும்பம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்) - நிர்வாக திறமையும், குடும்ப பொறுப்பும் மிக்க கும்பராசியினரே, இந்த மாதம் பணவரத்து இருக்கும். எந்த விஷயத்திலும் உடனடி தீர்வுகாண முடியாத இழுபறி நிலை காணப்படும். ஆனால் இந்தநிலை மாறி நன்மை ஏற்படும்.  புதிய நட்புகள் கிடைக்கும். 

பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  கவன தடுமாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  பணவரத்தும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது.  பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். 
 
வாழ்க்கை துணையுடன்  வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம்  கல்வியில் முன்னேற்றமடைய தேவையான  உதவிகள் கிடைக்கும்.  அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். 
 
அவிட்டம் 3, 4:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே  சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
 
சதயம்:
அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.
 
பூரட்டாதி 1, 2, 3:
பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள்  உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்
 
பரிகாரம்: சனிக்கிழமையில் பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி  சனிஸ்வர பகவானையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: நவம் 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்:  டிசம் 10, 11.