வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (18:33 IST)

தனுசு: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) - எந்த ஒரு வேலையும் மிகவும் சரியாக நடக்க வேண்டும். காலத்தை வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தனுசு ராசியினரே இந்த மாதம்  இறுதியில் எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம்.


தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.  தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களையும்  தீர்க்கும் வல்லமை ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது. 
 
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கைநழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்க பெறலாம். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்கும். 
 
பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். கலைத்துறையினருக்கு பண வரத்து இருக்கும்.
 
மூலம்:
அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.
 
பூராடம்:
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
 
உத்திராடம் 1:
சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை  ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த போட்டிகள்  விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். 
 
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வணங்க பணவரத்து கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: நவம் 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்:  டிசம் 6, 7.