மன அமைதி வேண்டுமா? சாய்பாபாவின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்குரியது. அந்த வகையில், வியாழன் சாய் பாபாவுக்கு மிகவும் உகந்த நாள். பக்தியுடன் அவரை வழிபடுபவர்களின் பிரார்த்தனைகளை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது ஆழமான நம்பிக்கை. வியாழக்கிழமை சாய் பாபாவை வழிபடுவது வாழ்க்கையின் பெரும் கஷ்டங்களைப் போக்கி, நல்ல பலன்களைத் தரும்.
வியாழக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
மன அமைதிக்கும், நினைத்த காரியங்கள் நடப்பதற்கும் கீழ்க்கண்ட மந்திரங்களை வியாழக்கிழமைகளில் சொல்வது மிகுந்த பலன் தரும்:
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.
(தினமும் 11, 33, 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்யலாம்.)
ஷீரடி சாய் பாபாவின் த்யான ஸ்லோகம்:
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.
நினைத்த காரியம் நடக்க:
"ஓம் சாய் குருவாயே நமஹ
ஓம் ஷீரடி தேவாயே நமஹ
ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ"
(தினமும் குளித்து முடித்த பின் சாய் பாபாவை நினைத்து 9 முறை உச்சரிக்கலாம்.)
இந்த மந்திரங்களைச் சொல்வதன் மூலம் பயம், கவலைகள் நீங்கி, மனதில் அமைதி ஏற்படும்.
Edited by Mahendran