புதன், 31 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (16:05 IST)

விஜய் டிவி பிரபலங்கள் இணைந்து கலக்கும் "தும்பா" பட ட்ரைலர் !

விஜய் டிவி பிரபலங்கள் இணைந்து கலக்கும்
"தும்பா" திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


 
அறிமுக இயக்குனர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் `கனா' தர்ஷன் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் இப்படத்தில், `கலக்கப்போவது யாரு' தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத், விவேக் - மெர்வின் ஆகியோர் இசையமைக்க  சந்தோஷ் தயாநிதி பாடல் பாடி, பின்னனி இசை பணிகள் மேற்கொள்கிறார். 

விஜய் டிவி பிரபலங்கள் இணைந்து கலக்கும்

 
முழுக்க முழுக்க ஃபாண்டஸி கலந்த தும்பை படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இதனை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், மே மாதத்தில் படம் வெளியாகக்கூடும் என்றும் சமீபத்தில் படக்குழுவினர் தெரிவித்தனர்.
 
"தும்பா" என்ற பெண் புலி தான் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில்,  குரங்கு, யானை, மான், அணில், தவளைகள் என நிறைய விலங்குகள் இருப்பதால் இப்படம் நிச்சயம்  குழந்தைகளை கவரும் என எதிர்பார்க்கபடுகிறது.