பேபி அக்கினேனி: கர்ப்பத்தை உறுதி செய்த சமந்தா?

Last Updated: திங்கள், 10 ஜூன் 2019 (16:28 IST)
நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து நான் கர்ப்பமாக இல்லை என்ற செய்தியை உறுதி செய்துள்ளார். 
 
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த 2017 ஆண்டு சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்த தம்பதியினருக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், சமந்தா கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து சமந்தா, தனது கர்ப்பம் குறித்து வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதனோடு நான் கர்ப்பமாக இருக்கனா? எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள் என கேட்டுள்ளார். 
இதன் மூலம் அவர் கர்ப்பமாக இல்லை என உறுதி செய்துள்ளார். அதோடு தற்போது அவர் பேபி என்னும் படத்தில் நடித்து வருகிறார் எனவேதான் டிவிட்டரில் தனது பெயரை சமந்தா அக்கினேனியில் இருந்து பேபி அக்கினேனியாக மாற்றியுள்ளார். 
 
ஆனால், இதை சில ஊடங்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :