திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (17:02 IST)

பிரிட்டிஷை விரட்டியடித்த ஒரு வீரனின் கதை – சைரா தமிழ் ட்ரெய்லர்

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சீயரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து துவம்சம் செய்தவர் சீயரா நரசிம்ம ரெட்டி. அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. சீயரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கிறார்.

இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, நிஹாரிகா என இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுரேந்தர் ரெட்டி.

தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் ரத்தினவேள் ஒளிப்பதிவில், அமித் திர்வேதியின் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.