1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (15:31 IST)

மது கையை அறுத்துக்கொள்ளவில்லை, ஆனால்..! மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தையும், வீட்டிற்குள் நடந்த சம்பவங்களை பற்றியும் மதுமிதாவை நேரில் சென்று சந்தித்த முன்னாள் போட்டியாளர் டேனியல் தெரிவித்துள்ளார். 


 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதாவுக்கும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை இருந்துவந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்கில் பரவலாக பேசப்பட்டது.  
 
ஆனால், மதுமிதா வெளியேற்றத்திற்கு அது இல்லை காரணம் என சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தததையடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியயே வந்துள்ள மதுமிதாவை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் டேனியல் நேரில் சந்தித்து பேசியுள்ளார். 
 
இதுகுறித்து பேசியுள்ள டேனியல், நான் மதுமிதாவிற்கு என்ன ஆனது என பதறிப்போய் அவரை நேரில் சந்திக்க போன் செய்தேன். ஆனால் மது, ஒப்பந்தம் படி இப்போதைக்கு எதை பற்றியும் பேசக்கூடாது. அப்படி பேசினால் என்னுடைய சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும் சிறிது நாட்களுக்கு பின் ஏற்பட்டு இதைப்பற்றி பேசுவோம் டேனி என்று கூறினார். இருப்பினும் அவரை சந்திக்க அவருக்கே தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் செய்யலாம் என்று மது வீட்டிற்கு சென்றேன். 
 
நான் சென்ற நேரத்தில் அவரது காயத்திற்கு மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார். அப்போது தான் நான் பார்த்தேன்.  கையில் மிகவும் நான் ஆழமான காயங்கள் இருந்தது. நான் எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன் அன்று நடந்த டாஸ்கின் போது மதுமிதா ஏதோ கருத்து சொல்லி இருக்கிறார். அதனை மற்ற போட்டியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அவர்கள் அனைவரும் சேர்ந்துகொண்டு மதுவை பயங்கரமாக கலாய்த்துள்ளனர். 
 
மற்றவர்கள் கிண்டலடித்து வெறுப்பேற்றியதால் தான் தான் மது அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அவராகவே கையை கிழித்துக்கொள்ளவில்லை.   மேலும் அந்த நேரத்தில் கஸ்தூரி மட்டும் தான் ஈர துணியை எடுத்து காயத்தை அமுக்கி உதவி செய்துள்ளார். மேலும் சேரன் மற்ற போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார். அதனால் தான் மது வெளியேறும் போது கஸ்தூரி மற்றும் சேரனிடம் மட்டும் தான் பேச விரும்புவதாக கூறினார் என டேனியல் தெரிவித்துள்ளார்.