1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Mahendran
Last Modified திங்கள், 5 டிசம்பர் 2022 (20:19 IST)

செல்வராகவனின் ‘பகாசூரன்’ டிரைலர் வெளியீடு!

bakasuran
செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசுரன் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இந்த படத்தில் அடுத்தடுத்து கொலைகள் செய்யும் ஒரு கொடூர மனிதராக செல்வராகவன் நடித்துள்ளார் என்பதும் இளம் பெண்களை தவறாக பயன்படுத்தும் நயவஞ்சகர்களை கொல்லும் கேரக்டரில் நடித்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது
 
மேலும் நட்டி நட்ராஜ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாகவும் சமூகத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய பிரச்சனையை சொல்லும் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran