வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (08:06 IST)

பா ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு ‘சைத்ய பூமி’ ஆவணப்பட டிரைலர் ரிலீஸ்!

அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இதையடுத்து இப்போது அவர் சைத்யபூமி என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் டிரைலர் வெளியாகி பரவலாக கவனம் பெற்றுள்ளது.