1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By siva
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (20:01 IST)

எங்க கேமே இனிமேல் தாண்டா ஸ்டார்ட்: ராமராஜனின் ‘சாமானியன்’ டீசர்!

samaniyan teaser
எங்க கேமே இனிமேல் தாண்டா ஸ்டார்ட்: ராமராஜனின் ‘சாமானியன்’ டீசர்!
ராமராஜன் நடித்த சாமானியன் என்ற திரைப்படம் உருவாகி வருவதாக நேற்று முன்தினம் தகவல் வெளியான நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
 
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நூலகம் ஒன்றில் ராமராஜன் ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் நுழைந்து அந்த நூலக மேலாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு எங்கள் கேமே இனிமேல் தாண்டா ஸ்டார்ட்என்று கூறும் வசனத்துடன் இந்த டீசர் முடிவுக்கு வருகிறது
 
இந்த டீசரில் இருந்து இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராமராஜன் ராதாரவி எம்எஸ் பாஸ்கர் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஹேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.