திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (14:55 IST)

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்த கப்ஜா டீசர் வெளியீடு!

கன்னட சினிமாவின் இரு முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் இருந்து அதிகளவில் ஆக்‌ஷன் திரைப்படங்கள் வெளியாகி இந்திய அளவில் கவனம் பெற்று வருகின்றன. கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட சினிமாவை இந்திய சினிமா ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் இப்போது கிச்சா சுதீப் மற்றும் உபேந்திரா ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான கப்ஜா படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் சந்திரசேகர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கே. ஜி எஃப் படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.