1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (20:19 IST)

தனுஷின் ‘நானே வருவேன்’ டீசர் ரிலீஸ் தேதி இதுதான்!

naane
தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் அறிவித்துள்ளார்.
 
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நானே வருவேன் படம் திட்டமிட்டபடி செப்டம்பர் இறுதியில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் டீசர் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தார்
 
தயாரிப்பாளர் தானு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி #NaaneVaruvean செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த teaser வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்.
 
தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது