புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (12:17 IST)

சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் மகன் தேவ்! இந்திய அளவில் சாதனை!

நடிகர் சூர்யாவின் மகன் தேவ் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 


 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தியா , தேவ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பிள்ளைகளை பொறுப்புடன் வளர்ப்பதற்காக சினிமாவுக்கு சில ஆண்டுகள் பிரேக் விட்ட நடிகை ஜோதிகா தற்போது மீண்டும் சினிமாவில் கலக்கி வருகிறார்.
 
சூர்யாவும் மனைவிக்கு நல்ல ஆதரவை கொடுத்து அடுத்தடுத்த படங்களில் வெற்றி காண உந்துணையாக இருந்துவருகிறார். அதே நேரத்தில் இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளின் லட்சியத்திலும் அவர்களின் கனவிலும் கவனத்தை செலுத்திவருகிறார்கள். 
 
சமீபத்தில் கூட மகள் தியா மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கைகளில் கோப்பையை வாங்கியுள்ளார்.


 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து இஷ்ரின்யூ முறையில் பயின்ற 40 பேர் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டி  நடத்தப்பட்டது. அதில் தண்டர்கேக் பிரிவில் கலந்துகொண்ட தேவ் வெற்றி பெற்றுள்ளார். தனது மகன் கலந்துகொள்ளும் இந்த போட்டியைக் காண சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றிருந்தனர்.