புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (18:58 IST)

கார்த்தி-ஜோதிகா படத்தில் சசிகுமார் பட நாயகி

முதல்முறையாக கார்த்தியும் ஜோதிகாவும் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்தை கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு நாயகியாக நிகிலா விமல் இணைந்துள்ளார். இவர் சசிகுமார் நடித்த 'கிடாரி' மற்றும் ;'வெற்றிவேல்' ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா தம்பியாக நடிக்க நிகிலா விமல், கார்த்தியின் ஜோடியாக  நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் நிகிலா விமல் கலந்து கொண்டார். இந்த தகவலை கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்து, நிகிலா விமலை இந்த டீம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
 
ஜோதிகா, கார்த்தி ஆகியோர்களின் தந்தையாக சத்யராஜ் நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு படம் என்றும், இந்த படம் கார்த்தியின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.