வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (20:38 IST)

’என். ஜி .கே ’படத்தின் டிரைலர் ரிலீஸ் ... செம மாஸ்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா  நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இதில், என்.ஜி.கே என்று மக்கள்  உரத்த கோஷம் எழுப்புவதில் இருந்து டிரைலர் ஆரம்பமாகிறது. நீ கூட்டத்தோட உள்ள சேர்ந்துட்டா உன்ன உள்ள விட்டுறுவாங்கன்னு நினைச்சியா .. என்று வசனம் ஆரம்பிக்கிறது.
 
அரசியலை அலசி ஆராய்வது போன்று இப்படத்தில் பலமான வசனம் உள்ளதாக தெரிகிறது. ’’எந்தவொரு மிகப்பெரிய  விஷயமானாலும் அதனோட ஆணிவேரில் இருந்து ஆரம்பிக்கிறதுதான் அழகு என்று கதாநாயகன் சூர்யா பேசுகிறார். இசையும் பலமாக காட்சிக்கு வலுசேர்ப்பதாக உள்ளது.
 
நிச்சயமாக நடிகர் சூர்யா ரசிகர்களுக்குத் தீனி போடவே வர உள்ளது என்,ஜி.கே படம் என்றால் மிகையல்ல.
இதற்கு முன்னதாக ஒருமுறை இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. தனது ட்விட்டர் பக்கத்தில் ’’உங்கள் அனைவருக்கும் ஒரு பெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்” இவ்வாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.