திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (19:27 IST)

சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டு பிள்ளை'யில் திடீரென இணைந்த அனிருத்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'நம்ம வீட்டுப்பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது இதனை அடுத்து இன்று இரவு இந்த படத்தின் பாடல்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் டி இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் திடீரென பிரபல இசையமைப்பாளர் அனிருத் இணைந்து உள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் பாடி உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இதுகுறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலின் வரிகள் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் வராத வரிகள்என்று சிவகார்த்திகேயன் கூற, அதற்கு அனிருத் ஒரு கேலிப் பார்வை பார்க்க, சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது
 
பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.