வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (19:18 IST)

அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் கூடிய விஷாலின் 'அயோக்யா' டீசர்

விஷால், ராஷிகண்ணா நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கிய 'அயோக்யா' படத்தின் டீசர் அறிவித்தபடியே இன்று இரவு சரியாக 7 மணிக்கு வெளியாகியுள்ளது

விஷால் போலீஸாகவும், பார்த்திபன் வில்லனாகவும் நடித்துள்ள இந்த படம் முழூநீள ஆக்சன் படமாக அமைந்துள்ளது என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது.

சில பேருக்கு பொம்பள மேல ஆசை, சில பேருக்கு பதவி மேல ஆசை ஆனா எனக்கு மனசு மேல ஆசை என்ற விஷாலின் வசனத்தில் இருந்து அவர் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருப்பார் என தெரிகிறது

ஆனால் விஷாலின் நடிப்பில் கிண்டலுடன் கூடிய ஆக்சன் தெரிவதால் இந்த படத்தில் அவர் தனது வழக்கமான பாணியை மாற்றியிருப்பார் என தெரிகிறது.

சாம் சிஎஸ் இசையில் பின்னணி இசை கலக்கலாக இருப்பதால் இந்த படம் அவருக்கு ஒரு மறக்க முடியாத படமாக அமையலாம். இயக்குனர் வெங்கட்மோகன் விஷாலுக்கு ஏற்ற சரியான ஆக்சன் கதையை தேர்வு செய்துள்ளார் என்பது டீசரில் இருந்து உறுதியாகிறது