வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 6 பிப்ரவரி 2019 (18:12 IST)

தமிழ் ராக்கர்ஸ் யார்? விஷால் மீது சந்தேகப்பட்டு போலீசில் தயாரிப்பாளர் புகார் மனு

தமிழ் ராக்கர்ஸ் யார் என்பது குறித்து நடிகர் விஷாலிடம் போலீசார்  விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார்.


 
ராஜா ரங்குஸ்கி படத்தை தயாரித்தவர் சக்தி வாசன், இவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தமனுவில், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்திவருபவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் எனவும் இன்னும் இரண்டு வாரங்களில் அவர்கள் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக நடிகர் விஷால் கடந்த 2017ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
 
ஆனால் இதுநாள் வரை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்கள் யார் என்பதை விஷால் தெரிவிக்கவிலை. எனவே விஷாலுக்கும் தமிழ் ராக்கர்ஸுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்னும் சந்தேகம் எனக்கு இருக்கிறது. எனவே விஷாலிடம் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சக்திவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.