வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 மே 2019 (09:02 IST)

விஜய் பட செட்டில் தீவிபத்து – பல லட்சம் நஷ்டம் !

விஜய் அட்லி காம்போவில் உருவாகும் விஜய் 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நேற்று நடந்த தீவிபத்தால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

விஜய் மற்றும் அட்லியின் கூட்டனியில் மூன்றாவது படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப்படம்  விஜய் 63 என அழைக்கப்பட்டு வருகிறத்ய். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னை மீனம்பாக்க்த்தில் நடைபெற்று வருகிறது.

படத்திற்காக மீனம்பாக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக செட் ஒன்று போடப்பட்டு இருந்தது. அந்த செட்டில் ஏற்பட்ட மின்கசிவுக் காரணமாக நேற்று தீ விபத்தி ஏற்பட்டுள்ளது. மரங்கள் மற்றும் காய்ந்த சருகுகள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மதிப்புள்ள செட்டும் படப்பிடிப்பு வாகனங்களும் எரிந்து சேதமடைந்துள்ளன.

விவரம் அறிந்து உடனடியாக வந்த தீயணைப்புத்துறையினர் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். ஏற்கனவே கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியுள்ள விஜய் 63 படக்குழுவுக்கு இப்போது தீவிபத்து பிரச்சனை மேலும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.