ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (22:32 IST)

ஜெயம் ரவியின் 24வது பட டைட்டில் அறிவிப்பு!

நடிகர் ஜெயம் ரவியின் 24வது படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரெங்கநாதன் இயக்கிய நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கோமாளி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
 ஜெயம் ரவியுடன் முதல்முறையாக காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் சம்யூக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, கவிதா, சம்பத்ராஜ், நிதின்சத்யா, ரவிபிரகாஷ், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
 'கோமாளி' என்ற இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை ஜெயம் ரவி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்களும், ரீடுவிட்களும் குவிந்து வருகிறது