வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (08:51 IST)

டெய்லி பேமெண்டே இவ்வளவா..? கல்லா கட்டும் யோகி பாபு

தற்போது கோலிவுட்டில் சிறந்த காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவரது உடல் அமைப்பும், டைமிங் காமெடியும் இவரது வெற்றிக்கு பலமாக உதவுகிறது. 
 
தற்போது வெளிவரும் பல படங்களில் இவர் கமெடியனாக ஒப்பந்தமாகிவிடுகிறார். பெரிய பட்ஜெட் சின்ன பட்ஜெட் படம் என எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு படங்களிலும் நடித்துவிடுகிறார். 
 
யோகிபாபு கடந்த ஆண்டு மட்டும் 20 படங்களில் நடித்துவிட்டாராம். குறிப்பாக விஜய், நயன்தாரா போன்ற நடிகர்களுடன் ஸ்க்ரீன் ஸ்பேசை பகிர்ந்துக்கொண்டுள்ளார். அதே போல் ஒந்த ஆண்டும் 19 படங்கள் வரை கையில் வைத்து பிஸியான கால்ஷீட்டுடன் உள்ளாராம். 
 
இதில், தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக வேறு நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுவின் டெய்லி பேமெண்ட் எவ்வளவு என்ற விவரம் தெரியவந்துள்ளது. அதாவது அவர் நாள் ஒன்றிற்கு ரூ.5 லட்சம் சம்பளம் பெறுகிறாராம்.