ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 9 மார்ச் 2024 (22:28 IST)

ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள்- தமிழக டிஜிபி தகவல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படுபவரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்குடன் புகைப்படம் வெளியானது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதில், ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன. ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி என தெரித்த பின், அவர் வழங்கிய  சிசிடிவி கேமராக்களை நிறுத்திவிட்டோம். சென்னை மாநகர ஆணையராக இருந்தபோது, 10 சிசிடிவி கேமராக்களை ஜாபர் சாதிக் ஸ்பான்சர் செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஜாபர் சாதிக்குற்கு தாம் கொடுத்தது விருது அல்ல, அது வெறும் பரிசுப்பொருள் மட்டுமே  என்று தெரிவித்துள்ளார்.
 
ஜாபர் சாதிக் பல முக்கிய பிரமுகர்களுடன் புகைப்படம் எடுத்தது சமூக வலைதளங்களில் பரவலானது குறிப்பிடத்தக்கது.