வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (19:04 IST)

புதிய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பாமக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும்: அன்புமணி

புதிய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பாமக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழ்நாட்டின் காவல்த்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் திரு. சங்கர் ஜிவால் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் இருக்கை தலைசிறந்த அதிகாரிகளால் அலங்கரிக்கப்பட்டது. அந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் திரு.சங்கர் ஜிவால் அவர்கள் அனைவருக்கும் பொதுவானவராக செயல்பட்டு தமிழகத்தில் அமைதி, பொது ஒழுங்கை பாதுகாத்து, போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பாமக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும்.
 
Edited by Siva