வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (14:19 IST)

காவிரி விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: தமிழக டிஜிபி எச்சரிக்கை

sankar jival
காவிரி விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில்  வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் பழைய வீடியோக்களை தற்போது நடந்ததை போல சித்தரித்து பரப்பப்பட்டு வருவதாக புகார் வந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
 
சமூக வலைத்தளங்களில் கடந்த சில மண் நேரங்களாக தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களையும், பழைய வீடியோக்களை தற்போது நடந்தது போல் சித்தரித்து ஒருசிலர் வெளியிட்டு வருவதை அடுத்தே டிஜிபி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 
Edited by Mahendran