செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2020 (14:24 IST)

Zee Cine Awards Tamil 2020: அனைத்து விருதுகளையும் அள்ளிய அஜித் - லிஸ்டில் வராத பிகில்!

பிரபல தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட Zee Cine Awards Tamil 2020 விருது விழாவில்  கமல்ஹாசன், போனி கபூர், இயக்குநர் சங்கர், லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, சமந்தா, தனுஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். 
 
இந்த விழாவில் திரைத்துறை சார்ந்த திறமைசாளிகள் பலருக்கும் விருது வழங்கி கவுரவித்தனர். அந்தவகையில் தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு வெளிவந்திருந்தது. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் கலெக்ஷனில் கல்லா கட்டி பாக்ஸ் ஆபீஸில் தூள் கிளப்பியது. இதில் விஸ்வாசம் கமெர்ஷியல் படம் என்பதால் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஜீ சினி அவார்டு விருது விழாவில் அஜித்தின் விஸ்வாசம் படம் சிறந்த பாடகர், பாடலாசிரியர், பேவரட் படம், பேவரட் இசையமைப்பாளர்,  பேவரட் நடிகர், பேவரட் ஹீரோயின் என  மொத்தம் 6 விருதுகளை அள்ளிச் சென்றது. ஆனால், விஜய் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்த்த பிகில் படம் இந்த லிஸ்டில் ஒரு விருது கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.