1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (18:47 IST)

அஜித் டுவிட்டருக்கு வருவாரா? யாஷிகாவின் கேள்விக்கு ரசிகர்கள் பதிலடி!

தல அஜித் டுவிட்டருக்கு வரவேண்டுமென டுவிட்டர் இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் சற்றுமுன் அஜீத்துக்கு அழைப்பு விடுத்தார் என்ற செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து அஜித் டுவிட்டருக்கு வருவாரா அல்லது எப்போதும் போல் அமைதியாக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் டுவிட்டருக்கு வர வேண்டும் நான் மிகவும் விரும்புகிறேன். என்னைப்போல் யாரெல்லாம் நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். யாஷிகாவின் இந்த கேள்விக்கு அஜித் ரசிகர்கள் பலர் கலாய்த்து கமெண்ட்டுகள் பதிவு செய்து வருகின்றனர் 
 
‘உங்கள் ஆசை நடக்க வாய்ப்பே இல்லை’ என்றும் ’அஜித் டுவிட்டருக்கு வர மாட்டார் என்றும் தல அஜித் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அஜித் அஜித் டுவிட்டருக்கு வந்தால் சூப்பராக இருக்கும் என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் டுவிட்டருக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது