திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (07:39 IST)

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எனது முழு ஆதரவு: யுவன்சங்கர் ராஜா கருத்து..!

சென்னையில் நடந்த ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற நிகழ்ச்சியில் பல குளறுபடிகள் நடந்ததை எடுத்து ஏ ஆர் ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் ஏ ஆர் ரகுமானுக்கு தனது முழு ஆதரவு என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். மேடையில் இருக்கும்போது எல்லாமே சீராக நடக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். 
 
இது போன்ற ஒரு சூழலுக்கு ரசிகர்கள் தள்ளப்படுவது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. ஒரு மிகப்பெரிய நிகழ்வை நடத்துவது என்பது சிக்கலான பணி. பெரிய அளவில் முன்னேற்பாடுகள் செய்தாலும் சில தவறுகள் அவ்வப்போது நிகழ்ந்துவிடும்.
 
எங்கள் இசைக்குழுவை அர்த்தமுள்ளதாக மாற்றும் ரசிகர்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்திவிடுகின்றனர். இந்த சம்பவத்தின் காரணங்களை ஆய்வு செய்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவறுகளை களைய வேண்டும். 
 
ஒரு சக இசையமைப்பாளர் என்ற முறையில் ஏஆர் ரகுமானுக்கு நான் முழு ஆதரவாளிக்கிறேன். இதை ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வாகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva