திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (22:00 IST)

“யுவன் சங்கர் ராஜா மாதிரி பொண்ணு வேணும்” - சிம்பு கலகல

‘யுவன் சங்கர் ராஜா மாதிரி எனக்குப் பொண்ணு வேணும்’ என நகைச்சுவையாகக் கூறியுள்ளார் சிம்பு.
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. இந்தப் படத்துக்கு முதன்முதலாக  இசையமைத்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்டார் தனுஷ்.
 
இந்த விழாவில் பேசிய சிம்பு, “என்னுடைய கேரக்டருக்கு எளிதில் யாரும் செட்டாக மாட்டார்கள். ஆனால், யுவன் சங்கர் ராஜா எனக்கு நன்றாக செட்டாவார். அவருடைய கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் செய்யும் தொந்தரவுகளைப் பொறுத்துக்  கொள்வார். அதனால், அவர் மாதிரியான குணம் கொண்ட பெண் தான் எனக்கு செட்டாகும். ‘உங்க ராசியில் யாராச்சும் பெண்  இருந்தா சொல்லுங்க, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று அவரிடமே கேட்டிருக்கிறேன்” என்று நகைச்சுவையாகப்  பேசினார்.